Categories
சினிமா தமிழ் சினிமா

புத்தாண்டு ஸ்பெஷல்…. திரிஷாவின் “பரமபதம் விளையாட்டு”…. ஓடிடியில் ரிலீஸ்…!!

திரிஷா நடிப்பில் உருவாக்கியுள்ள பரமபதம் விளையாட்டு திரைப்படம் எப்போது வெளியாகும் என்று தகவல் தெரியவந்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள “பரமபதம் விளையாட்டு” என்ற திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா தாக்கத்தால் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாமல் போனது.

இந்நிலையில் இப்படத்தை இயக்கிய திருஞானம் மற்றும் படக்குழுவினர் இப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்காக ஹாட் ஸ்டார் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் சுவாரஸ்யம் நிறைந்த இப்படம் வரும் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

திரிஷா

Categories

Tech |