கடந்த மார்ச் மாதம் முதலே நோய்த்தொற்றின் பரவல் அதிகமாக உள்ளதால் உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வந்தது. அந்த வகையில் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் நோய்த்தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் பல்வேறு கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் திருமணங்கள் அனைத்தும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இருப்பினும் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் தடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
டிசம்பர் 31 நள்ளிரவில் மற்றும் ஜனவரி 1ஆம் தேதி பொது மக்கள் கடற்கரையில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அரசு அறிவித்துள்ளது. தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் மட்டும் வழக்கம் போல் செயல்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தை மக்கள் அதிக அளவில் கூடினால் நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்பு உண்டு என தெரிவித்துள்ளது. சில வெளிநாடுகளில் கொரோனா நோய்த்தொற்று தற்போது மீண்டும் வரும் சூழலில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.