அமெரிக்க நாட்டின் ஒரு வங்கியினுடைய துணைத் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியினரான ஒரு பெண்ணை நியமித்திருக்கிறார்கள்.
இந்திய வம்சாவளியினரான 54 வயதுடைய சுஷ்மிதா சுக்லா என்ற பெண்ணை அமெரிக்க நாட்டின் நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவராக நியமித்திருக்கிறார்கள். அவர் காப்பீட்டு துறையில் அதிக அனுபவம் கொண்டவராக இருந்திருக்கிறார்.
எனவே அந்த வங்கியின் ஆளுநர்களின் குழுவானது, அவரை நியமிக்க அங்கீகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அந்த வங்கியினுடைய துணை தலைவராக பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டிருக்கிறது.