Categories
உலக செய்திகள்

கொரோனா இல்லாத நாடாக உருவெடுத்தது நியூசிலாந்து – கொண்டாட்டத்தில் நியூசி பிரதமர்!

கோவிட்-19 னால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த கடைசி நோயாளியும் குணமடைந்ததால், கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகள்  திணறிவரும் வேளையில் ஆஸ்திரேலியாவுக்கு அருகேவுள்ள குட்டித்தீவு நாடான நியூசிலாந்து  சாமர்த்தியமாக கையாண்டு பல்வேறு உலக தலைவர்களின் பாராட்டை பெற்றுள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்து நாட்டில் சிகிச்சை பெற்றுவந்த கடைசி கரோனா நோயாளியும் தற்போது குணமாகியுள்ளதால், கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து உருவெடுத்துள்ளது.

திருமணம், இறுதி சடங்கு உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி நடத்தலாம். கடைகளும் வழக்கம்போல செயல்படலாம். மேலும் பொதுப் போக்குவரத்தும் 100 விழுக்காடு இயங்கும். இருப்பினும் நியூசிலாந்து குடிமகன்களைத் தவிர மற்றவர்கள் வெளிநாடுகளிலிருந்து நுழைய தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

Categories

Tech |