Categories
கிரிக்கெட் விளையாட்டு

#CWC19Final நியூசிலாந்து 241 ரன்கள் குவிப்பு…. கோப்பையை வெல்லுமா இங்கிலாந்து..!!

இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் குவித்துள்ளது  

உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக நிக்கோலசும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். மார்ட்டின் கப்தில் 19 ரன்களில் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் , நிக்கோல்சுடன்  ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடியது. சிறப்பாக ஆடி வந்த நிலையில் வில்லியம்சன் 30 ரன்களில் ப்லெங்கெட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து அரை சதம் அடித்த  நிக்கோல்சும் 55 ரன்களில் ப்லெங்கெட் ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. அடுத்து இறங்கிய அனுபவ வீரர் ராஸ் டெய்லர் 15 ரன்களிலும், ஜேம்ஸ் நீஷம் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் டாம் லேதம் பொறுப்பாக ஆடினார்.  கிராண்ட் ஹோம் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் டாம் லேதம் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் குவித்துள்ளது. மிட்செல் சாண்ட்னர் 5* ரன்களிலும், ட்ரெண்ட் போல்ட் 1* ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ப்லெங்கெட்  3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 242 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

Categories

Tech |