Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து தொடர்: தவான் பங்கேற்பதில் சந்தேகம்?

ஷிகர் தாவனுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது, ஆரோன் ஃபிஞ்ச் அடித்த பந்தை ஷிகர் தவான் பிடிக்க முயன்றபோது இடது தோளில் காயம் ஏற்பட்டது.

இதனால் ஃபீல்டிங்கில் இருந்து பாதியிலேயே தவான் வெளியேறினார். இதையடுத்து இந்திய பேட்டிங்கின்போதும் தவானுக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராகக் களமிறங்கினார். இதையடுத்து தவானுக்கு காயம் ஏற்பட்டது உறுதியானது. இந்த காயத்திற்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பிசிசிஐ சார்பாக பேசுகையில், ”தவானுக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அந்த ஸ்கேன்களை மருத்துவர்கள் பார்த்து வருகின்றனர். அவரது உடல்நிலை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. இன்று இந்திய அணி நியூசிலாந்து புறப்படவுள்ளது. அதற்கு முன்னதாக ஷிகர் தவான் நியூசிலாந்து வருவாரா என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.

இந்தக் காயத்தால் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் தவான் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியின்போதும் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து தவானின் விலா எலும்பில் பட்டதால், அந்தப் போட்டியின் ஃபீல்டிங்கின்போதும் தவான் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |