ZOOM வசதிகொண்ட கான்டாக்ட் லென்சை உருவாக்கி கலிபோர்னியா பல்கலைக்கழகம் சாதனை.
பார்வைக் குறைபாட்டை பூர்த்தி செய்வதற்காகவும், அழகிற்காகவும் கான்டாக்ட் லென்சுகள் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் சில கான்டாக்ட் லென்சுகளில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை தற்போது விஞ்ஞானிகள் புகுத்தியுள்ளனர். இதன்படி இவற்றை அணிந்து காட்சிகளை உற்றுநோக்கி (ZOOM) காண முடியும்.
இதனை செயல்படுத்துவதற்கு கண்களை இருமுறை மூடி திறந்தால் தானாகவே காட்சிகள் அனைத்தும் உற்றுநோக்கி (ZOOM) முடியும். மீண்டும் இருமுறை மூடித் திறந்தால் காட்சிகள் சாதாரண தோற்றத்திற்கு மாறிவிடும். இந்த புதிய கண்டுபிடிப்பை கலிபோர்னியாவின் சான் டிக்கோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளர்.