Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளத்தொடர்பு விவகாரம்… புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணம் நடந்த ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடதோரசலூர் பி.கே.எஸ் நகர் பகுதியில் ஜான் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நூர்ஜஹான் என்ற மனைவியும், ஜாகிர் உசேன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவர் மும்பையில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் தியாகதுருகம் அருகிலிருக்கும் பீளமேடு கிராமத்தில் வசிக்கும் ஆயிஷா என்ற பெண்ணுக்கும் ஜாகிர் உசேனுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ஜாகிர் உசேன் மும்பையில் திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளது.

இதனால் மனமுடைந்து கடந்த 1-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி அவர் திரும்ப 8-ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜாகிர் உசேன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த அவரது உறவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ஜாகீர் உசேன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜாகீர் உசேனின்  தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |