Categories
உலக செய்திகள்

ஆயுதமேந்திய மக்கள்…. உத்வேகத்துடன் போர்க்களத்தில் புதுமணத் தம்பதிகள்….!!!

உக்ரைனில் நாட்டை காக்க களமிறங்கிய இளம் தம்பதிகள் போர்க்களத்தில் தேனிலவை கழித்துள்ளனர்.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடந்த 24ஆம் தேதியன்று படையெடுக்கத்தொடங்கி, அங்கு கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. எனவே, உக்ரைன் அரசு, மக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி, பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உக்ரைன் போர்க்களமாக மாறி, கடும் வன்முறை நிலவுகிறது.

இந்நிலையில், கடந்த வாரத்தில் திருமண செய்த யாரினா அரிவா மற்றும் ஸ்வியாடோஸ்லாவ் பர்சின் என்ற இளம் தம்பதி, தங்கள் நாட்டை காக்க போராடி வருகிறார்கள். இவர்களுக்கு வரும் மே மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், ரஷ்யா போர் தொடுத்தால் கடந்த வாரம் தலைநகர் கீவில் திருமணம் செய்தனர்.

பாதுகாப்பு உடைகளுடன் துப்பாக்கியை கைகளில் ஏந்திக்கொண்டு போர்க்களத்தில் தங்களின் தேனிலவை கழிப்பது தொடர்பில் இருவரும் தெரிவித்திருப்பதாவது, நாங்கள் யாரும் தோற்றுப் போவோம் என்று கூறவில்லை, அழவில்லை. அனைத்து மக்களும் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். இது அனைத்தும் காலத்தின் கேள்வி. மேலும், பெரும்பாலும் மக்கள் போராட தயார் நிலையில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தங்கள் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள். இந்தப் போரில் நாங்கள் வெல்வோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று யாரினா அரிவா தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஸ்வியாடோஸ்லாவ் பர்சின் கூறுகையில், என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஒயின் அருந்தும் நேரம் விரைவாக வந்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். அனைவரிடமும் போர் நிறைவு பெற்றது. நாங்கள் வென்றுவிட்டோம் என்று கூறுங்கள். உலக சுதந்திரத்திற்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று ரஷ்ய மக்கள் உட்பட இந்த உலக மக்கள் நினைவில் வைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |