திருமணமானவுடன் பிரிய நேர்ந்த அகதி தம்பதி மூன்று வருடங்கள் கழித்து, தங்கள் வாழ்க்கையை தொடங்கவுள்ளதால் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.
இஸ்லாமிய சிறுபான்மை பிரிவை சேர்ந்த ரஷீத் அஹ்மது மற்றும் வீர்தா ரஷீத் தம்பதி, கடந்த 2018-ல் திருமணம் செய்துள்ளனர். வீர்தா, பாகிஸ்தான் நாட்டில் இருந்து தப்பி 15 வருடங்களுக்கும் அதிகமாக ஈரான் நாட்டில் அகதியாக இருந்திருக்கிறார். இந்நிலையில், இவர்களுக்கு திருமணமானவுடன் ரஷீத் கனடா சென்றுவிட்டார்.
இதனால், இத்தம்பதி, தொலைபேசியிலேயே வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்கள். அரிதாக என்றைக்காவது விடுமுறை கிடைத்தால் மட்டும், ரஷீத் மனைவியை சந்தித்து விட்டு சென்றிருக்கிறார். இந்நிலையில், வீர்தா கர்ப்பமடைந்திருக்கிறார். அவருக்கு பிரசவத்திற்கான தேதி நெருங்கும் சமயத்தில் தான் விசா கிடைத்திருக்கிறது.
இதனால் கனடாவிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. மற்றொரு புறம், ரஷீத்திற்கு விமானமும் ரத்தாகிவிட்டது. அவரால் பிரசவ சமயத்தில் மனைவியுடன் இருக்க முடியவில்லை. எனவே, கணவர் மற்றும் பெற்றோர் அவரின் அருகில் இல்லை. அந்த சமயத்தில் வீர்தாவிற்கு, அழகான பெண் குழந்தை பிறந்துவிட்டது.
அப்போது, குழந்தையின் இதயத்துடிப்பு சரியாக இயங்கவில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால், கனடாவில் இருந்து கொண்டு ரஷீத் தவித்து வந்திருக்கிறார். ஒரு வழியாக தற்போது, இவர்களுக்கு மகிழ்ச்சி கிடைத்துவிட்டது. வீர்தா, தன் குழந்தையுடன் கடந்த புதன்கிழமை அன்று கனடா சென்றுவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நிஜமாகவே நான் கனடாவிற்கு வந்து விட்டேனா? நம்பவே முடியவில்லை என்று கூறியிருக்கிறார். ரஷீத் தன் மகளை முதல்தடவையாக கையில் ஏந்திய நெகிழ்ச்சியில் இருக்கிறார். புதிய வாழ்க்கையை தொடங்கப்போகும், எல்லையற்ற மகிழ்ச்சியில் இருப்பதாக தம்பதிகள் தெரிவித்துள்ளார்கள்.