Categories
தேசிய செய்திகள்

“ஒரு மாசம் கூட ஆகல” அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாங்க…. கதறும் குடும்பத்தினர்….!!

திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் புதுப்பெண் மர்மமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அபிஜித் என்பவர் அசாமை சேர்ந்த அஜந்தா என்ற பெண்ணை காதலித்து 24 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து தம்பதி டெல்லிக்கு சென்ற நிலையில் அஜந்தா தூக்கில் தொங்கியபடி சடலமாக வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அஜந்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். இதுகுறித்து அஜந்தாவின் குடும்பத்தினர் கூறும்போது அபிஜித் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

அவர் தனது முதல் மனைவிக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தல் கொடுத்ததால் அபிஜித்திடமிருந்து 2004-ல் விவாகரத்து பெற்று சென்றார். இந்த உண்மையை மறைத்து அவர் அஜந்தாவை திருமணம் செய்தார்.திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆவதற்குள் வரதட்சணை கேட்டு அவரும் அவரது குடும்பத்தினரும் எங்கள் மகளை கொலை செய்து விட்டனர். அஜந்தாவின் உடலில் பல இடங்களில் காயம் உள்ளது” எனக் கண்ணீருடன் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |