திருமணமான 16 நாளில் புதுப்பெண் மரணமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் ரகுபதி இவர் அப்பகுதியில்இருக்கும் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 30ஆம் தேதி ரகுபதிக்கும் பொள்ளாச்சி அருகே இருக்கும் ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த ராமசாமியின் மகள் தீபாவிற்கும் உடுமலையில் வைத்து திருமணம் நடந்தது.
தீபா கணவர் ரகுபதியுடன் விளாமரத்துபட்டியில் வசித்து வந்தார். திடீரென தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தீபாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார் ரகுபதி. இதனையடுத்து தீபாவின் பெற்றோர் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய மகளை பார்த்து கதறி அழுதனர். இதனை தொடர்ந்து தகவலறிந்த போலீஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் தீபாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது இந்நிலையில் தீபாவின் தந்தை ராமசாமி தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் எனவும் தளி போலீசில் புகார் அளித்தார். திருமணமான 16 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட காரணத்தினால் ஆர் டி ஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார்.