பழமுதிர் நிலையம் மற்றும் காய்கறி கடை திறப்பு விழாவை முன்னிட்டு அதிக விலைக்கு வாங்குபவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகாமையில் அனிதா காய்கறி கடை மற்றும் பழமுதிர் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் மீனவர் நலன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து விழாவில் சிறப்பு சலுகையாக 300 ரூபாய்க்கு பழம் மற்றும் காய்கறிகள் வாங்குகின்ற வாடிக்கையாளர்களுக்கு ஸ்டீல் வாட்டர் கேன் மற்றும் 500 ரூபாய்க்கு மேல் பழம் மற்றும் காய்கறி வாங்குபவர்களுக்கு அலுமினிய கடாய் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை திறப்பு விழா அன்று மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.