Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாய் வீட்டிற்கு அழைத்து சென்ற கணவர்…. புதுப்பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இண்டி மொரஹட்டி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவருக்கு கப்பட்டி கிராமத்தில் வசிக்கும் மோனிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவாறு ஆனந்த் தனது மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனியாக இருக்கும் மோனிஷாவை கவனிக்க யாரும் இல்லாததால் ஆனந்த் தனது மனைவியை கப்பட்டியில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு கொண்டு போய் விட்டுள்ளார். இதனை அடுத்து மோனிஷா நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர்.

அப்போது தூக்கில் தொங்கியபடி மோனிஷா உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று மோனிஷாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மோனிஷாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோனிஷா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |