Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விருந்துக்கு சென்ற புது மணத்தம்பதி… “சமைத்துக்கொண்டிருந்த போது நடந்த சம்பவம்”.. அதிர்ச்சியடைந்து அழுத உறவினர்கள்..!!

திருமணம் முடிந்த 4 நாட்களில் சகோதரி வீட்டிற்கு விருந்திற்கு சென்ற புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி மாவட்டம் உடுமலையை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் தேவி என்ற பெண்ணுக்கும் கடந்த எட்டாம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சகோதரியின் வீட்டிற்கு திருமண விருந்திற்காக செல்ல, புதுமணத் தம்பதியினருக்கு பிரம்மாண்டமாக விருந்து சாப்பாடு தயாராகி கொண்டிருந்தது. அச்சமயம் தேவி தனி அறைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வராததால் அவரை அழைக்க சென்றபோது தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனை கண்டு கதறிய குடும்பத்தினர் தாராபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |