நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜூலி அன்னே ஜெண்டர், மிதிவண்டியில் மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்த சம்பவம் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர், பிரசவத்திற்காக மிதிவண்டியில் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், ஒரு மணி நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இது குறித்து தன் முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “இன்று அதிகாலை 3:04 மணிக்கு, புதிய நபரை, எங்கள் குடும்பம் வரவேற்றிருக்கிறது.
பிரசவ சமயத்தில், மிதிவண்டியை ஓட்ட வேண்டும் என்ற திட்டம் இல்லை. ஆனால் நடந்துவிட்டது. மருத்துவமனைக்கு செல்ல அதிகாலை 2 மணியளவில் தயாரான போது, பிரசவ வலி அதிகமாக இல்லை. எங்கள் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு, 2-3 நிமிடங்களில் சென்று விடலாம். மருத்துவமனைக்கு சென்ற பத்து நிமிடங்களில் பிரசவ வலி அதிகமாக இருந்தது.
தற்போது, குழந்தையை பெற்றெடுத்தது ஆச்சரியமாக இருக்கிறது. குழந்தை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவளின் தந்தையை போன்று” என்று தெரிவித்திருக்கிறார்.