நியூசிலாந்தில் விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாட தேவைக்கான அத்தியாவசிய பொருட்களை ஆஸ்திரேலிய நாட்டில் ஆர்டர் செய்து வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
நியூசிலாந்தில் பண வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. உணவு பொருட்களுக்கான விலை அதற்கு முந்தைய வருடத்தை காட்டிலும் 7.6% அதிகரித்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் இல்லாத வகையில் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை 18% அதிகரித்திருக்கிறது.
எரிபொருளின் விலையும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை ஆஸ்திரேலியாவிலிருந்து ஆர்டல் செய்து பெறுகிறார்கள். நியூசிலாந்து நாட்டை விட ஆஸ்திரேலியாவில் பொருட்களின் விலை குறைவாக உள்ளது என்று மக்கள் தெரிவிக்கிறார்கள்.
அதாவது, ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து டெலிவரி செய்யப்படும் பொருள்கள் விமானத்தின் மூலமாக கொண்டுவரப்படுவதால், அதற்கும் சேர்த்து பணம் வாங்கப்படுகிறது. அப்படி இருந்தும், நியூசிலாந்தில் இருக்கும் பொருட்களின் விலையை விட மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, மக்கள் ஆஸ்திரேலியாவில் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து பெற்று வருகிறார்கள்.