Categories
உலக செய்திகள்

“மேகன் மெர்க்கலின் குற்றச்சாட்டு “… நியூசிலாந்தில் பாதிப்பை ஏற்படுத்துமா…? பதிலளித்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்…!!

அரச குடும்பத்தின் மீது பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் முன் வைத்த குற்றச்சாட்டுகள் நியூசிலாந்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நியூசிலாந்து பிரதமர் கூறியுள்ளார். 

அமெரிக்காவில் ஓப்ரா வின்ஃபிரேயின் நேர்காணல் நிகழ்ச்சியில் பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும்  கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில், தம்பதியர் அரச குடும்பத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இந்த நிகழ்ச்சியானது நேற்று அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதும், தம்பதியரின் இந்தக் குற்றச்சாட்டிற்கு பல்வேறு தரப்பினர் விமர்சனங்கள் கூறிவந்தனர்.

இந்நிலையில் அரச குடும்பத்தின் மீது ஹரியும்- மேகன் மெர்க்கலும்  கூறிய குற்றச்சாட்டு நியூஸிலாந்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரதமர், “அவர்கள்  கூறிய குற்றச்சாட்டுகள் நியூஸிலாந்தில் எந்த  வித பாதிப்பபையும் ஏற்படுத்தாது. அதனால், அரசியலமைப்பில் எந்தவித மாற்றமும் ஏற்படாது” என்று ஜெசிந்தா கூறியுள்ளார்.

Categories

Tech |