பிரபல நடிகர் கமலஹாசன் முதல்வர் பதவிக்கு புதிய ரூட் போடுவதாக கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
மக்கள் நீதி மய்ய கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் என அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரையில், கட்சியை ஆரம்பித்த சில நாட்களில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே நல்ல வாக்கு சதவிகிதத்தை பெற்றவர் கமல்.
தற்போது புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் சூழலை ஏற்படுத்துவோம் என வலியுறுத்தியது கட்சி உறுப்பினர்களிடையே மட்டுமல்லாமல் தமிழக மக்களிடையே ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகம் அதிக தொகுதிகளை கொண்டிருப்பதாலும், சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஆட்சியைப் பிடிக்க கமலஹாசன் ரூட் போட்டுள்ளார் என்பது உள்ளிட்ட கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.