அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அரசு பெண் பணியாளர்களை, ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, விசாரணையில் உறுதியானது.
நியூயார்க் நகரின் ஆளுநரான, ஆண்ட்ரூ குவாமோ, மீது கடந்த வருடம் பல பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். எனவே, இதுகுறித்து, அரசு பெண் பணியாளர்கள் 179 பேரிடம், லெடிஷியா ஜேம்ஸ் என்பவரது குழுவின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் ஆளுநர், பெண்கள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பில், லெடிஷியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளந்தாவது, கடந்த ஐந்து மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டது. இதில், ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ, பெண்கள் பலரிடம் தவறாக நடந்து கொண்டது உறுதிசெய்யப்பட்டது. மேலும் இவர், அரசு பெண் பணியாளர்களிடம் ஆபாசமாக பேசுவது, முத்தம் கொடுப்பது, கட்டாயப்படுத்தி கட்டியணைத்து போன்று துன்புறுத்தி வந்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் அதிகாரிகள் சிலரும், ஆண்ட்ரூ குவாமோவுடன் சேர்ந்து கொண்டு பெண் பணியாளர்களுக்கு, அலுவலகத்தில் அதிக வேலைச்சுமைகளை கொடுத்து துன்புறுத்தி இருக்கிறார்கள். இந்த வழக்கில், ஆண்ட்ரூ குவாமோவுக்கு எதிராக 74,000 ஆவணங்களும், புகைப்படங்களும் கிடைத்திருக்கிறது என்று கூறியுள்ளார்