Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத மழை…. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்…. அவசரநிலை அறிவித்த நியூயார்க் மேயர்….!!

நியூயார்க் நகரில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்நகர மேயர் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தை Ida புயல் தாக்கியுள்ளது. இதன் காரணமாக அந்நகரில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. இதனையடுத்து நியூயார்க் நகர மேயரான Bill de Blasio தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நியூயார்க் நகரத்தில் இன்று அவசரநிலை பிரகடனத்தை அறிவிக்கிறேன். ஏனெனில் நியூயார்க் முழுவதும் கனமழை மற்றும் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. இது போன்ற மோசமான வானிலையை நாம் இன்று சந்தித்துள்ளோம்.

இதனால் மக்கள் தங்களின் வீடுகளில் இருந்து இன்று இரவு வெளி வர வேண்டாம். குறிப்பாக அவசர சேவைகள் மட்டும் நடக்கும். இது போன்ற நிலையில் மக்கள் சுரங்கப் பாதைகளிலும், சாலைகளிலும் செல்ல வேண்டாம். இந்த கடுமையான வெள்ளப்பெருக்கில் மக்கள் எங்கும் வெளியே போக வேண்டாம். அனைவரும் வீட்டிலேயே இருங்கள். அதிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுமார் 5,300 வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை மக்கள் வீட்டிற்குள்ளே இருங்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த புயலால் நியூயார்க் நகரில் உள்ள சாலைகள், சுரங்கப்பாதைகள், ரயில் நிலையங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நகரில் உள்ள பல வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நியூயார்க் நகரில் மட்டும் ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |