காயத்தில் இருந்து மீண்ட ஜோப்ரா ,தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து விலகி உள்ளார் .
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் இந்திய சுற்றுப்பயணதில் , இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் இடம் பிடித்திருந்தார். இந்தப் பயணத்தில் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாடிய ஜோப்ராவிற்கு , கைவிரல் மற்றும் வலது முழங்காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டதால், அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். அதன் பிறகு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் ,கைவிரலில் அறுவை சிகிச்சை காரணமாக தொடரில் பங்குபெற முடியவில்லை.இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்ட ஜோப்ரா, கடந்த வாரம் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சசெக்ஸ் அணிக்காக விளையாடினார்.
இதில் 13 ஓவர்களில் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோப்ரா ,அதன்பின் 2 வது இன்னிங்ஸில் கை வலியால் அவதிப்பட்டார். இதன் காரணமாக அவரால் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை. அதோடு முழங்கையில் மீண்டும் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அவருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளார்.