பாகிஸ்தானுடனான தொடரில் இருந்து நியூசிலாந்து அணி விலகிய நிலையில் , இங்கிலாந்தும் தொடரை ரத்து செய்துள்ளது .
கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையிலும், பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. இதற்கு நன்றிக்கடனாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்தது.
இதன்படி அடுத்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த இங்கிலாந்து அணி 2 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது .இந்நிலையில் பாகிஸ்தானுடனான தொடரை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது .இதற்கு முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுடனான தொடரில் நியூசிலாந்து அணி ரத்து செய்த நிலையில் தற்போது இங்கிலாந்தும் ரத்து செய்துள்ளது.