Categories
உலக செய்திகள்

எங்க நாட்டுல கொரோனா இல்லை…. கெத்தாக அறிவித்த நியூசிலாந்தில் 2 பேர் பாதிப்பு…. உலக நாடுகளில் பரபரப்பு…!!

நியூசிலாந்து கொரோனா இல்லாத நாடாக தங்களை அறிவித்த நிலையில், அங்கு மீண்டும் புதிதாக 2 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் கோர தாண்டவம் ஆடியிருக்கிறது. அதனுடைய மொத்த பாதிப்பு 81 லட்சத்தை தாண்டிய நிலையில், 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸால் உயிரிழந்து உள்ளனர். இது ஒருபுறமிருக்க பல உலக நாடுகள் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு தங்களது நாடுகளை கொரோனா இல்லாத நாடாக அறிவித்து வருகிறது. அந்த வகையில், கொரோனாவை ஒழித்து விட்டோம் என்று நியூசிலாந்தில் சில நாட்களுக்கு முன்பு அறிவித்த நிலையில்,

தற்போது அங்கு மீண்டும் தொற்று ஏற்பட்டு உள்ளது என மிகப்பெரிய அதிர்ச்சியை உலக நாடுகளின் அளவில் ஏற்படுத்தியுள்ளது. அங்கு தற்போது மீண்டும் இரண்டு பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலும் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, இரண்டாவது அலை தொடங்கியுள்ளதாக வல்லுநர்கள் கூறும் நிலையில், இந்தியாவில் நான்கு மாத கால கட்டத்தை தாண்டிய போதிலும், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல், அதிகரித்து செல்வதால் இரண்டாவது கட்ட அலையானது இந்தியா, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளின் நிலை என்னவாகும் என்பது மக்களின் மனதில் ஒருவிதமான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |