Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 12 மணி நேரம்… அதே இடத்தில தான் இருக்கும்… 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில நீடிக்கக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதன்காரணமாக, இன்று கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக மழையும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக மழையும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக

கடலூர் மாவட்டம் கொத்தவச்சேரியில் 19 சென்டிமீட்டரும்,

நாகை மற்றும் காரைக்காலில் தலா 16 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

இதேபோல், குடவாசல் (திருவாரூர்), புவனகிரி (கடலூர்) தலா 15,

சேத்தியாத்தோப்பு (கடலூர்) 14,

தரங்கம்பாடி 13,

சீர்காழி (நாகப்பட்டினம்), டிஜிபி அலுவலகம் (சென்னை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 12,

ராமேஸ்வரம் , அண்ணா பல்கலை , திருப்பூண்டி (நாகப்பட்டினம்), காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 11,

ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), கொள்ளிடம், எம் ஜி ஆர் நகர் (சென்னை) தலா 10,

ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), தூத்துக்குடி, தலைஞாயிற் (நாகப்பட்டினம்), சிதம்பரம் (கடலூர்) தலா 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |