Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 3 நாட்களுக்கு… மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களான, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் மாதம் முடிக்கவேண்டிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ஆம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம், பேராவூரணி திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது. 14ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |