Categories
உலக செய்திகள்

“அடுத்து 3வது கொரோனா” நைஜீரியாவில் வந்தாச்சு – உலக சுகாதார அமைப்பு…!!

நைஜீரியாவில் மூன்றாவதாக புது வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் ஒன்று பரவியுள்ளது. ஆனால் இது முந்தைய கொரோனாவை விட வீரியம் மிகுந்ததாக காணப்படுகின்றது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த உருமாறிய வைரஸ் போல இல்லாமல் மற்றொரு புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நோய்த்தொற்று தடுப்பு மையம் கூறுகையில், “நைஜீரியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

ஆனால் இந்த வைரஸ் பற்றி விரிவாக ஆராய வேண்டி உள்ளது” என்று தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற  நாடுகளில் புதிய வகை வைரஸ் ஆனது தன்னுடைய தன்மையை மாற்றிக் கொண்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை உள்ள நாடான நைஜீரியாவில் உருமாற்றம் அடைந்த மூன்றாவதாக ஒரு கொரோனா வைரஸ் பரவி வருவதால் அச்சம் நிலவியுள்ளது`.

Categories

Tech |