கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் உள்ள காரணத்தினால் அடுத்த 5 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலம். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலம். இந்த இரண்டு காலகட்டத்தில்தான் நாட்டிற்குத் தேவையான மழை பெருமளவு கிடைக்கும். இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ளது. இந்த ஆண்டு சிறிது முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது.
இந்நிலையில் கேரளாவில் ஜூன் 3ஆம் தேதி முதல் காற்றுடன் கனமழை பெய்யும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.