Categories
உலக செய்திகள்

“வந்தாச்சு அடுத்த கேம்”… வார்னர் பிரதர்சின் புதிய முயற்சி…!!

வார்னர் பிரதர்ஸின் அடுத்த விளையாட்டு தொகுப்புகளின் வரிசையில் கோதம் நைட்ஸ் முக்கிய இடம் பிடிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசி ஃபேண்டம் எனும் ரசிகர்கள் நிகழ்வில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், தனது பேட்மேன் விளையாட்டு தொகுப்புகளின் வரிசையில் ‘கோதம் நைட்ஸ்’ என்ற விளையாட்டை வெளியிட்டிருக்கிறது. இந்த விளையாட்டு தொடர்பான சுமார் 8 நிமிடக் காணொலியை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அரங்கேற்றியுள்ளது.

அந்த ட்விட்டர் பதிவில், பேட் கேர்ள், ராபின் ஆகியோர் இலக்கை அடைய முன்னேறிச் செல்லும் விதமாக காணொலி விறுவிறுப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஹீரோ விளையாட்டுகளின் வரிசையில், கோதம் நைட்ஸ் முக்கிய இடம் பிடிக்கும் எனவும் அந்நிறுவனம் உறுதியாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |