இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் போன்றவைகள் 5ஜி சேவையை தொடங்கவுள்ளது. ஆனால் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையையே இன்னும் தொடங்காமல் இருப்பது வாடிக்கையாளர்களிடம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த கவலையை போக்கும் விதமாக அடுத்த மாதம் நாடு முழுவதும் 4ஜி சேவையை தொடங்க இருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது அடுத்த வருடம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 5ஜி சேவையையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் சாமானிய மக்களுக்கும் குறைவான விலையில் 5ஜி சேவை கிடைக்கும். இந்த தகவலை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் பூர்வார் கூறியுள்ளார். இந்த தகவலால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மேலும் ஜியோ நிறுவனமானது இம்மாதத்தில் 5ஜி சேவையை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.