திமுக எம்.பிக்கள் தயாநிதிமாறன், டி.ஆர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இன்று காலை திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டார். பட்டியலின சமூக மக்களை கொச்சை படுத்துவதாக பேசுகின்றார் என்று அவர் மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பதியப்பட்ட SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர். இது காலை முதலே தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று காலை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ் பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார். இது அரசியல் பழிவாங்கல், முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் வழக்குகளை நான் கொடுப்பதால் என் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டினார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அடுத்தப்படுத்த திருப்பங்கள் என்று சொல்லும் அளவுக்கு திமுகவினர் செயல்பட்டனர். அண்மையில் தமிழக தலைமைச் செயலாளர் சந்திக்க சென்ற திமுக எம்.பிக்களான தயாநிதிமாறன், டி.ஆர் பாலு தங்களை தாழ்த்தப்பட்டவராக நடத்தி எங்களை சந்திக்க மறுக்கிறார் தலைமை செயலாளர் சண்முகம் என பரபரப்பு பேட்டியளித்தார் தயாநிதிமாறனின். இவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டம் எழுந்தநிலையில், தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் தயாநிதிமாறன்.
இதனிடையே தயாநிதிமாறன், டி.ஆர் பாலு மீது கோயம்புத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் கொடுத்த புகாரில் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இப்போது ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டுவிட்டு ஜாமீனில் வெளியே வந்து விட்டதால் தாங்களும் கைது செய்யப்படுவோம் என்று அஞ்சி திமுக எம்பிக்கள் டி ஆர் பாலு மற்றும் தயாநிதி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்து இருக்கின்றனர்.
அந்த மனுவில், தங்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க கோரி, இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.இதனை நீதிபதி நிர்மல்குமார் மதியம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த வழக்கு வீடியோ கான்பரன்சிங் மூலமாக விசாரணை என்பது நடைபெற இருக்கின்றது. இதன் மீது நீதிபதிகள் எந்த மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்க இருக்கீறார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.