பிலிப்பைன்ஸில் தேர்தலில் வெற்றியடைந்த முன்னாள் சர்வாதிகாரியின் மகனை அதிபராக அறிவித்திருக்கிறார்கள்.
பிலிப்பைன்ஸில் அதிபர் தேர்தலானது கடந்த 9ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் பெர்டினான்ட் ரொமால்டெஸ் மார்கோஸ் ஜூனியர் என்ற நபர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். இவர் பெர்டினான்ட் இமானுவேல் எட்ராலின் மார்கோஸ் சீனியரின் என்ற சர்வாதிகாரியின் மகன்.
பெர்டினான்ட் இமானுவேல் எட்ராலின் மார்கோஸ் சீனியர் அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டு 36 வருடங்கள் ஆன நிலையில், தற்போது அவரின் மகன் அந்நாட்டிலேயே அதிபராகி இருக்கிறார். இதுபற்றி பேசியதாவது, நான் தாழ்மையாக உள்ளேன். மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாம் அனைவரும் சரியாக இருந்துவிட முடியாது.
ஆனால், அனைத்து நேரங்களிலும் சரியாக இருப்பதற்கு முயன்று கொண்டிருக்கிறோம். அனைத்து மக்களும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். என்னை வாழ்த்த வேண்டும். ஏனெனில் அதிபர் நன்கு இருந்தால் மட்டுமே நாடும் நன்கு இருக்கும் என்று கூறியிருக்கிறார்.