பிரிட்டன் மகாராணியாரின் இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து இளவரசர் சார்லஸின் மனைவி கமிலா நாட்டின் ராணியாகியிருக்கிறார்.
பிரிட்டனில் 70 வருடங்களாக ஆட்சி புரிந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத் தன் 96 வயதில் உடல் நல பாதிப்பால் நேற்று மரணமடைந்தார். அதனை தொடர்ந்து அவரின் மகனான இளவரசர் சார்லஸ் மன்னராகவும் அவரின் மனைவி கமிலா ராணியாகவும் அறிவிக்கப்படவிருக்கிறார்கள். எனினும் கமிலா இளவரசி என்று தான் அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மகாராணியார் இரண்டாம் எலிசபெத் இதற்கு முன்பு தெரிவித்திருந்ததாவது, மன்னராக சார்லஸ் பட்டம் பெறுகிற போது, கமிலாவிற்கு ராணி பட்டம் கிடைக்க வேண்டும் என்று நான் விருப்பப்படுகிறேன் என கூறியிருந்தார். இளவரசர் சார்லஸ் நாட்டின் மன்னராகும் போது, அவரின் மனைவிக்கு ராணி பட்டம் வழங்கப்படும்.
எனினும் அவருக்கு என்ன பட்டம் அளிக்கப்படும்? என்று பல வருடங்களாக ஆராய்ச்சி நடந்தது. பிரிட்டன் நாட்டின் வரலாற்றிலேயே மன்னர் அல்லது அரசியின் வாழ்க்கை துணையாக இருப்பவர்களுக்கு கன்சார்ட் அந்தஸ்து தான் வழங்கப்படும். எனினும், மகாராணியார் இதற்கு முன்பே, ராணியாக கமிலா இருப்பதற்கு விருப்பம் தெரிவித்துவிட்டார்.
எனவே அவருக்கு ராணி பட்டம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. மேலும் அவரது பல நன்னடத்தைகள், நாட்டு மக்களிடையே அவருக்கு அதிக வரவேற்பையும் அன்பையும் பெற வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.