சென்னையில் கொரோனா பாதிப்பு 400யை எட்டியது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்துள்ளது. நாட்டின் வர்த்தக நகரமான மகராஷ்டிரா அதிக பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தமிழ்நாடு என கொரோனா தாக்கத்தை சந்தித்த மாநிலங்களின் பட்டியல் நீள்கிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் ஆறாவது இடத்தில் இருந்தாலும், கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
மகாராஷ்டிரா முதலிடத்தை பெற்று வரும் நிலையில் டெல்லி மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் தமிழக சுகாதாரத் துறை சார்பாக வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையிலே இருந்தது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதில் 4 பேர் 10 வயதுக்குட்பட்டோர், கொரோனா தொடாமல் இருந்த தர்மபுரியில் முதல் நபருக்கு கொரோனா பாதிப்பு.
சென்னையில் அதிகபட்சமாக 27 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 400யை எட்டியது. இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளதால் பலியானோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்த என அடுத்தடுத்து அதிர்ச்சி அப்டேட் வெளியாகிய நிலையில் இன்று ஒரே நாளில் 90 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் கொரோனா பாதித்த 752 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் பாதிக்கப்பட்டு குணமானோர் எண்ணிக்கை 752ஆக உயர்ந்து 3ஆவது இடத்தில இருத்த தமிழகம் 2ஆம் இடத்துக்கு முன்னேறியது மகிழ்ச்சியான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.