Categories
மாநில செய்திகள்

“இனிவரும் காலம் பாஜக காலம்” – எல். முருகன் உறுதி…!!

மத்திய மாநில அரசுகளை குறைகூறுவதிலேயே குறியாக இருக்கிறார் ஸ்டாலின் என எல் முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தியாகராஜ நகரில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் எல் முருகன் தற்போதுள்ள அரசியல் பிரச்சனை குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது. வருகின்ற காலம் பாஜகவின் காலம். பாஜகதான் அரசியலை நிர்ணயிக்க உள்ளது. கொரோனா சூழலை கையாளுவதில் உலகிற்கு எடுத்துக்காட்டாக பிரதமர் மோடி திகழ்கிறார்.

வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். கொரோனா சூழலில் மக்கள் பணி செய்யும் மத்திய, மாநில அரசுகளை குறை சொல்வதிலேயே ஸ்டாலின் குறியாக இருக்கிறார். என்னுடைய குழந்தை இந்தி கற்கக் கூடாது எனக் கூற நீங்கள் யார்? நீங்கள் நினைப்பது போல் தமிழகம் இப்போது இல்லை. தமிழகம் தற்போது ஆன்மீக பூமி. ஒரு கோடி இந்துக்கள் இருப்பதாக கூறும் திமுக கட்சியானது இந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது ஏன்? இவ்வாறு ஸ்டாலினை எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |