லண்டனில் இருக்கும் NHS நைட்டிங்கேல் மருத்துவமனைக்கு புதிதாக வரும் நோயாளிகளை அனுமதிக்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா சிறப்பு சிகிச்சைக்காக கிழக்கு லண்டனில் இருக்கும் ExCel சென்டரில் NHS நைட்டிங்கேல் மருத்துவமனை ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதியில் இருந்து இயங்கி வந்தது. நாலாயிரம் படுக்கைகள் அமைந்த மருத்துவமனையில் பெரும்பாலான படுக்கைகள் காலியாகவே காணப்பட்டது. முதல் மூன்று வாரத்தில் 51 நோயாளிகளுக்கு மட்டுமே மொத்தமாக அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நைட்டிங்கேல் மருத்துவமனைக்கு NHS பிரிட்டன் எவ்வளவு செலவு செய்தது என்பதை இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில் மருத்துவமனை ஊழியர்களுக்கு தலைமை நிர்வாகி சார்லஸ் இமெயில் ஒன்று அனுப்பியிருந்தார். அந்த இமெயிலில் மருத்துவமனை பணிகள் காத்திருப்பில் வைக்கப்படும் என்றும் தேவைப் படும் சமயம் பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வீட்டிலேயே இருந்து நிபுணர்களின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றிய லண்டன் வாசிகளுக்கு மிக்க நன்றி கொரோனா தொற்றை NHS எப்படி கையாளுகிறது என்பதற்கு இது ஒரு குறிப்பிட வேண்டிய புள்ளியாகும்.
அதேநேரம் இந்த விஷயத்தில் நமது பங்களிப்பு முடிந்துவிட்டது என அர்த்தமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை London, Manchester, Harrogate, Bristol மற்றும் Birmingham போன்ற ஐந்து இடங்களில் நைட்டிங்கேல் மருத்துவமனை திறக்கப்பட்டது. ஆனால் அனைத்து மருத்துவமனைகளிலும் மிகக் குறைந்த அளவிலேயே நோயாளிகள் சிகிச்சைக்கு வந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.