NHS நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை கௌரவிப்பதற்காக ஜார்ஜ் சிலுவை மற்றும் காலன்ட்ரி பதக்கம் ஆகியவற்றை வழங்க மகாராணியார் அறிவித்துள்ளார்.
பிரித்தானியா நாட்டில் 73 ஆண்டுகளாக NHS நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தை கௌரவிக்கும் விதமாக மகாராணியார் ஜார்ஜ் சிலுவையை வழங்கியுள்ளார். மேலும் இதில் பணிபுரியும் ஊழியர்களை கௌரவிப்பதற்கு காலன்ட்ரி பதக்கம் (Queen’s Gallantry Medal) வழங்குவதாகவும் மகாராணியார் அறிவுறுத்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக கொரோனா கால கட்டங்களில் துணிச்சலுடனும், மனிதாபிமானதுடனும் பணிபுரிந்த இந்த பதக்கத்தை பெரும் பணியாளர்களை பாராட்டும் வகையில் மகாராணியார் அவரது கையால் எழுதிய கடிதத்தின் மூலம் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஜார்ஜ் கிராஸ் என்ற பதக்கம் ராணியின் தந்தையான ஆறாம் ஜார்ஜ் அவர்களால் நிறுவப்பட்டதாகும். இந்த பதக்கம்’ மிக பெரிய வீரத்துடன் செயல்படும்’ பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாகும்.