லண்டனில் NHS ஊழியர் வீட்டை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 26ஆம் தேதி David Gomoh(24) என்ற இளைஞன் வீட்டை விட்டு வெளியேறி சில நிமிடங்களில் மிகவும் கொடூரமாக குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். NHS ஊழியரான David Gomoh மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போலீசார் அவரது கொலை குறித்த விசாரணையை தீவிரமாக மேற்கொண்டனர். விசாரணையில் Muhammed Jalloh (18) என்ற இளைஞனும் 16 வயது இளைஞனும் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து David Gomoh குத்துபட்டு காயங்களுடன் தென்படுவதற்கு சற்றுமுன்னர் வேறொரு நபருக்கு எதிராக கூறப்பட்ட சம்பவம் குறித்து GBH ஏற்படுத்த சதி போட்டு இந்தக் கொலையை இவர்கள் செய்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். செவிலியர் தாயைப் போன்று David Gomoh NHS நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
அங்குள்ள ஊழியர்களுக்கு அத்தியாவசிய உபகரணங்களை வழங்குவதற்கு பெரிதும் உதவினார் David Gomoh. அவரது சகோதரி லிசி கூறுகையில் “அவன் ஒரு நல்ல ஆணாக தான் இருந்தான். எந்த ஒரு தீமை தரும் செயலிலும் ஈடுபட்டதில்லை. சொந்தத் தொழிலை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பான். கொலை செய்யப்பட்டு மரணம் அடையும் அளவிற்கு அவனுக்கு தகுதியில்லை என வேதனையுடன் கூறினார்.
தந்தை கொரோனா தொற்றினால் மரணமடைந்து விட அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் நிலையில் David Gomohக்கு இப்படி நடந்துவிட்டது. கணவர் மற்றும் மகனின் மரணத்தால் அவரின் தாயாரும், தந்தை மற்றும் சகோதரனின் மரணத்தால் அவரது சகோதரியும் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். NHS சமூகத்திற்காக மிகவும் கடுமையாக உழைத்தவர் முகமூடி அணிந்த ஒரு குழுவால் அணுகப்பட்ட David Gomoh பின்னர் கத்தியால் பலமுறை குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.