Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதற்கு அக்காவை தாக்கினாய்…. தந்தையின் கொடூர செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மது குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்து மகனை மொட்டை மாடியிலிருந்து கீழே தள்ளிய தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கருப்பனூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி கடந்த வருடம் இறந்துவிட்டார். இதனால் ராஜ்குமார் தனது மகன்கள் ராமச்சந்திரன், மஞ்சுநாதன் மற்றும் மகள் அர்ச்சனா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். எனவே மனைவி இறந்ததிலிருந்து ராஜ்குமார் மது குடித்துவிட்டு தினசரி வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது. இவருடைய மகன் ராமச்சந்திரன் ஓசூரில் தங்கி பணிபுரிந்து வருகின்றார். இவர் குறிப்பிட்ட தொகையை தனது சகோதரரின் வங்கி கணக்கிற்கு மாதமாதம் அனுப்பி வைத்துள்ளார்.

இதனை அறிந்த ராஜ்குமார் தனது மகளிடம் மது வாங்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அர்ச்சனா பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் அவரை தாக்கியுள்ளார். இதுகுறித்து மஞ்சுநாதன், அர்ச்சனா இருவரும் தந்தை ராஜ்குமார் வீட்டின் மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ராஜ்குமார் மொட்டை மாடிக்கு சென்றபோது அவரிடம் மஞ்சுநாதன் ஏன் அக்காவை தாக்கினாய் என கேட்டதற்கு நீ உயிரோடு இருந்தால் தான் என்னை கேள்வி கேட்பாய் எனக்கூறி ராஜ்குமார் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் அவரின் தலை மற்றும் முகத்தில் கிழித்து தாக்கி மாடியில் இருந்து தள்ளிவிட்டார்.

இயதனால் கீழே விழுந்த மஞ்சுநாதனை மயக்கமடைந்த நிலையில் அப்பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் மேல்சிகிச்சைக்காக மஞ்சுநாதன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |