கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தீடிர் சோதனையில் ஈடுபட்டனர். உக்கடம் பகுதியில் அசாருதீன், குனியமுத்தூரில் அபுபக்கர் சித்திக் , போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா
உள்ளிட்ட 8 பேரின் வீடுகளில் இன்று காலை 6 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் நடைபெற்ற இந்த தீடிர் சோதனையால் கோவை மாவட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.