Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலை முதல் 43 இடங்களில் அதிரடி சோதனை….. பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தகவல்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 23-ஆம் தேதி கார் வெடி விபத்து நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் என்பவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் கோவையில் நாச வேலைகளுக்கு ஜமேஷா தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டது தெரியவந்தது.

இதனையடுத்து ஜமேஷாவின் கூட்டாளிகள் 6 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை சீர்குலைப்பதற்காக கோவையில் நடைபெற்றது தற்கொலைப்படை தாக்குதல் என பாஜக உட்பட பல்வேறு கட்சிகளும் குற்றம் சாட்டிய நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று கோவையில் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜமேஷா முபீன் தொடர்புடைய இடங்கள் மற்றும் சென்னை புதுப்பேட்டையில் முகமது நிஜாமுதீன் என்பவரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து உக்கடம், கோட்டைமேடு, பொன்விழா நகர், ரத்தினபுரி உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் சென்னையில் உள்ள மண்ணடி, ஜமாலியா, பெரம்பூர், புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 43 இடங்களில் சோதனை நடைபெற்று முடிந்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றுள்ள நிலையில், பல்வேறு விதமான முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாக‌ என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |