திருச்சி மத்திய சிறையில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
NIA அதிகாரிகள் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் சோதனை நடத்தி வருகின்றார்கள். கேரள மாநிலத்தில் இருந்து வந்துள்ள NIA அதிகாரிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்பொழுது ஆலோசனை நடத்தியும் வருகின்றார்கள். NIA எஸ்.பி தர்மராஜ் ஆட்சியருடன் சேர்ந்து சிறிது நேரத்துக்கு முன்பதாக ஆலோசனை ஈடுபட்டார். 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் ஒன்பது நபரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
9 பேரை கைது செய்து, அழைத்து செல்லவும் NIA அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இவர்களிடம் விசாரணை மற்றும் சோதனை நடத்தி ஸ்மார்ட் ஃபோன்களை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். பல்வேறு வழக்குகளில் சிறப்பு அகதிகள் முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் யார் யாரிடம் பேசினார்கள் ? என்ற தகவல்களை இவ்வளவு நாட்களாக NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் இன்று கைது செய்ய வந்து இருக்கின்றார்கள். அதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கேரள மாநில எஸ்.பி தர்மராஜ் பேசியபோது ஆட்சியர் இதற்கான ஆவணங்களை என்னிடம் கொடுங்கள். அதற்குப் பிறகு இவர்களை அழைத்துச் செல்லுங்கள், அதற்கான உத்தரவை நான் அறிவிப்பேன் என தெரிவித்ததாக சொல்லப்படுகின்றது.