Categories
மாநில செய்திகள்

திருநெல்வேலி அருகே NIA அதிகாரிகள் சோதனை..!!

திருநெல்வேலி  அருகே  திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு உளவுத்துறையினர் தமிழகத்திலும்  ஐ எஸ் தீவிரவாத அமைப்பினர் இதேபோன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக  தகவல் கொடுத்தனர். அதன்படி தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் (NIA) தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, ராமநாதபுரம், மதுரை, தேனி, மண்ணடி மற்றும் மேலப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் சோதனையை நடத்திய அதிகாரிகள் சிலருக்கு சம்மன் அனுப்பியும் விசாரித்து வருகின்றனர்.

Image result for nia

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம்  வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளியில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடா நாட்டில்  திவான் முஜிபூர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் பற்றி சில  ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

Categories

Tech |