நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் அன்சருல்லா அமைப்பைச்சேர்ந்த 14 பேர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் . இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணையும் , அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். நெல்லை மேலப்பாளையத்தில் வசித்து வரும் முகம்மது இப்ராஹீம் என்பவரது வீட்டிலிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.