ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு துறையினர் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில்விநாயகம்ப்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் வாடகை பாத்திரக்கடையி ன் உரிமையாளர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 5_ம் தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குபதிவு செய்து 11 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு மார்ச் 14 _ம் தேதி தேசிய புலனாய்வு துறைக்கு மற்றபட்டது. இந்நிலையில் மீண்டும் விசாரணையை ஆரம்பித்த தேசிய புலனாய்வு துறையினர் திருச்சி, கும்பகோணம் மற்றும் காரைக்காலில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளிலும், திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.