திருப்பத்தூர் மாவட்டம் மொலாகரம்பட்டி பகுதியிலிருக்கும் ஹோலி கிராஸ் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி மாணவிகளிடையே பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உணவு சமைக்கும் திருவிழா நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவில் பலவகையான சிறுதானியங்களைக் கொண்டு பலவகையான உணவுகளைச் சமைத்துக் காட்டி கல்லூரி மாணவிகள் அசத்தினர்.
நமது மூதாதையர்கள் நூறு வருடங்களுக்கும் மேல் உயிர் வாழ்ந்ததற்கு காரணம் பாரம்பரிய உணவு வகைகளைச் சமைத்து சாப்பிட்டதுதான். சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, வரகு உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்கள், கைக்குத்தல் அரிசி, பருப்பு வகைகள் போன்றவற்றை பயன்படுத்தி பல வகையான உணவுகளை சாப்பிட்டுவந்தனர். இதனால் நீண்ட ஆயுளுடன் 100 வருடங்களுக்கும் மேல் உயிர் வாழ்ந்துவந்தனர்.
இதனடிப்படையில், பாரம்பரிய உணவு வகைகளைப் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹோலி கிராஸ் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பாரம்பரிய உணவு தானியங்களைக்கொண்டு பாரம்பரிய உணவுகளைச் சமைத்து அசத்தியுள்ளனர்