Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நிச்சயமா இவரு எதிர்காலத்துல,சிறந்த கேப்டனாக திகழ்வார்”….! ரிஷப் பண்ட்-ஐ பாராட்டி தள்ளிய கவாஸ்கர்…!!!

இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் பற்றி சுனில் கவாஸ்கர் பாராட்டிப் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் இருந்து வந்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது, அவருக்கு காயம் ஏற்பட்டதால் ,இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார். எனவே இந்த சீசனில் டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்-க்கு பதிலாக ,கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். இவர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி  சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி, தற்போது வரை நடைபெற்ற போட்டிகளில் தரவரிசை பட்டியலில், முதலிடத்தில் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் ,ரிஷப் பண்ட் பற்றி கூறியுள்ளார்.

அதில் இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு தலைமை தாங்கி வரும் , இளம் வீரர் ரிஷப் பண்ட் சிறப்பாக அணியை நடத்திவருகிறார். அதோடு பேட்டிங் மற்றும் பவுலிங்  வீரர்களை  அவர் சிறப்பாக விளையாட வைத்துள்ளார். சில சமயங்களில் இக்கட்டான சூழலிலும் அவர் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுத்துள்ளார். ஒரு சில தவறுகள் இருந்தாலும், அதை திருத்திக் கொண்டு செயல்படுகிறார். தன்னுடைய சொந்த யோசனையில், இக்கட்டான சூழலையும்  சமாளிக்கும் முடிவை எடுத்திருக்கிறார் . இதனால் ரிஷப் பண்ட் சர்வதேச போட்டியிலும் ,அணியை தலைமை தாங்கி நடத்துவதற்கான ,அனைத்து தகுதிகளும் இருப்பதாகவும் ,அதோடு எதிர்காலத்தில் சிறந்த கேப்டனாக விளங்குவார் ,அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்று சுனில் கவாஸ்கர், ரிஷப் பண்ட் பற்றி  பாராட்டி பேசியுள்ளார்.

Categories

Tech |