பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சார்க்கோசி மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சார்க்கோசி முக்கிய நீதிபதி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நிக்கோலஸ் சார்க்கோசி 2007- 2012ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் இருந்தார் . அதற்குப் பிறகு அவர் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருவதால் நிக்கோலஸ் -க்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டு வருகின்றனர்.
ஆனால் நிக்கோலஸ் சார்க்கோசி நான் சட்டத்திற்கு புறம்பாக எந்தவித தவறையும் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார். ஒருவேளை நிக்கோலஸ் சார்க்கோசி மீதான முறைக்கேடு நிரூபணமாகிவிட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு மில்லியன் யூரோ அபராதமும் நீதிமன்றத்தில் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.