பிரபல நடிகர் ஆதியுடன் சேர்ந்து மீண்டும் நிக்கி கல்ராணி நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான மிருகம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஆதி. அதன்பின் இவர் ஈரம், அய்யனார், ஆடுபுலி,அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தற்போது தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது.தெலுங்கில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு சிவுடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க உள்ளார். ஆதியும் நிக்கி கல்ராணியின் சேர்ந்து இதுவரை இரண்டு படங்களை நடித்து முடித்துள்ளனர்.
So glad to release the first look of my next Telugu flick #Sivudu ♥️
With my Hatrick Hero @AadhiOfficial 🤗✨
Directed by #Suseenthiran Sir ✨#SathyaPinisetty @aakanksha_s30 @Mee_sunil @harishuthaman @UrsVamsiShekar pic.twitter.com/p2RjoXYmFJ— Nikkii Galrani Pinisetty (@nikkigalrani) March 11, 2021
தற்போது இவர்கள் மூன்றாவது முறையாக படத்தில் இணைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு இவர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இவர்கள் மூன்றாவது முறையாக இணைந்திருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.