Categories
மாநில செய்திகள்

“நீட் தேர்வு” மத்திய அரசு கைவிடும் வரை…. மாணவர்கள் விட வேண்டாம்….!!

தமிழக  மத்திய  அரசு நீட் தேர்வை கைவிடும் வரை மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டாம் என்று மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சீனிவாச திருமண மண்டபத்தில் வைத்து நீட் எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், நீட் தேர்வு வேணுமா? வேண்டாமா? என்பது குறித்து சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தட்டும் .ஆனால் மாணவர்கள் நீட் வேண்டாம் என்று போராட்டங்களை நடத்தி அதில் வெல்ல வேண்டும்.

நீட் தேர்வு என்பது 4000 மாணவர்களுக்குப் மருத்துவப் படிப்பு சேர்க்கை சம்பந்தப்பட்டது அல்ல. மாநில உரிமை மற்றும் தமிழகத்தின் மருத்துவ வசதிகள் சம்பந்தப்பட்டது. இதையடுத்து இந்தியாவிலே மகப்பேறு பிரசவம் தமிழகத்தில் 63%, குஜராத்தில் 36% மற்றும் உபியில் 27% மருத்துவமனையில் மகப்பேறு நடக்கிறது. இந்தப் புள்ளிவிவரம் கொண்டு தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு எடுத்துக் கூறலாம். அதனால் நீட் தேர்வை மத்திய அரசு விடும் வரை  மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |